13 April 2009

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு - நியுட்டனின் மூன்றாம் விதி

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு

நம்மில் பலர் நாம் ஒரு விஷயம் நடந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாலும், அது நடக்காது என நினைத்து நமக்கு பிடிக்காத விஷயங்களுக்கு துணை போய் கொண்டு இருக்கிறோம்.

உதாரணத்துக்கு தேர்தலில் நமக்கு ஒரு சுயேச்சை வேட்பாளரை பிடித்து இருந்தாலும் அவர் வெற்றிபெற வாய்பே இல்லை என நாமே தவறாக முடிவு செய்து, நாம் அவருக்கு வாக்களிப்பது வீண் எனவும் முடிவு செய்து, நமக்கு பிடிகாதவராய் இருப்பினும், வெற்றி வாய்ப்பு அதிகம் என நினைக்கும் நபர்களில் நமக்கு ஓரளவுக்கு பிடித்த அல்லது பிடிகாதவர்களிலேயே ஓரளவுக்கு பரவாயில்லை என நினைக்கும் நபருக்கு வாக்களிக்கிறோம். இல்லை வாக்களிகாமலேயே இருந்து விடுகிறோம். இதனால் உண்மையில் நாம் விரும்பிய சுயேட்சையே பலருக்கு பிடித்தவராக இருப்பினும் அவர் நமது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்பே இல்லாமல் போய்விடுகிறது.

இத்தகைய தவறினை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனாலும் அவர் பெரும் சில வாக்குகள் இவ்வாறு வெற்றி பெற வாய்ப்பில்லை என நினைத்து வேறு நபர்களுக்கு வாக்களித்தவர்கள் அடுத்த தேர்தலிலாவுது திருத்திக்கொள்ள உதவும். இந்த தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெற உதவும்.

எனவே தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்களியுங்கள். வாக்களியுங்கள்.

3 comments:

Sankar said...

Nice post.

I could relate it to various other things/events/people ;-)

But does the blog title match the contents ?

Nikanth Karthikesan said...

@Sankar: Thanks

Regd blog title.. yes it doesnt apply directly.. I meant to say,
"Every action has an equal and opposite reaction" ==> "No action can go waste". ==> "Do not assume that voting for a suyetchai/newbie/scholar is total waste"

Vijesh said...

nalla sethi..

I hope many will do justice in this election.