2009AD. இந்தியாவிலிருந்து ஐ.நா வின் கப்பலில் ஆயிரம் பேர் இலங்கையில் நிவாரண பணிகள் செய்வதற்காக செல்கின்றனர். அதில் கார்த்தி ஒருவன். கார்த்தி விஞ்ஞானி. ஆண்ட்ரியா ஒரு மருத்துவர். ரீமா சென் ஒரு பாதுகாப்பு அதிகாரி. ஆனால் வழியில் சுனாமி தாக்குகிறது. இவர்கள் மூன்று பேர் மட்டும் யாரும் இல்லாத தீவில் கரை ஒதுங்குகின்றனர்.
அங்கே இயற்கையில் உருவான டைம்-வார்ப்(Time-warp) பாறை ஒன்று உள்ளது. அதில் உள்ளே நுழைந்து அடுத்த பக்கம் வந்து பார்த்தால் காலம் கீ.பீ 209ஆம் ஆண்டில் சோழ மன்னனுக்கும்(பார்த்திபன்) ஒரு ராணிக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஒளிந்திருந்து கவனிகின்றனர். போரில் தோற்கும் பார்த்திபன் மற்றும் அவரது 17 வீரர்கள் சிறை-இல அடைக்கப்படுகின்றனர். கார்த்தி அவர்களை காப்பாற்றி மீண்டும் அந்த டைம்-வார்ப் பாறையில் புகுந்து இக்காலத்திற்கு(2007 AD) திரும்புகின்றனர். மறுபடியும் இலங்கைக்கு அருகே உள்ள தீவில் திரிகின்றனர். அப்போது புலிகள் பயன்படுத்திய ஆயுத கிடங்கு ஒன்றை கண்டு பிடிக்கின்றனர். அவற்றை எடுத்து கொண்டு பார்த்திபன் மற்றும் 17 வீரர்கள் மீண்டும் கீ.பீ 208 செல்கின்றனர். இப்பொழுது மாடர்ன் weapon-களை கொண்டு போரை சுலபமாக வெல்கின்றனர். இதனை பார்த்துவிட்டு கார்த்தி/ரீமா/ஆண்ட்ரியா மீண்டும் தற்காலத்திற்கு(2008AD) வருகின்றனர். வந்து பார்த்தால்...
இந்தியா உலகின் மிகபெரிய வல்லரசாக இருக்கிறது. இப்பொழுது நாம் பார்ப்பதை விட அறிவியல் மிகவும் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது! அமெரிக்காவில் லியோ-நார்டோ டி காப்ரியோ எனும் நடிகன் "10 incarnations " எனும் லோக்கல் மொழி படத்தில் நமது அதிபர் மன்மோகன் சிங்க் மாதிரி ஒரு ரோல் செய்கிறார். அமெரிக்காவில் உள்ள ஏழை மாணவர்கள், இந்தியாவிற்கு on-site வர துடித்து கொண்டு இருக்கின்றனர். office-க்கு, வேட்டி-துண்டுடன் formals-ல்தான் வர வேண்டுமா என இந்தியன்-embassy-il கேட்டு கொண்டு நிற்கின்றனர்.
மீண்டும் கார்த்தி அந்த டைம்-வார்ப் பாறைக்கு திரும்புகிறார். அதிலிருந்து வரும் காற்றின் கார்பன் வெளியீட்டை அளவிட்டு, future-க்கு செல்ல எந்த திசையில் செல்ல வேண்டும் என கணிக்கிறார். செல்கிறார். (முற்றும். கற்பனை: Nikanth, Sankarlal)